அதிர்ச்சி!! கோல்மால் பட நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு!! திரைத்துறையினர் இரங்கல்!!
அதிர்ச்சி!! கோல்மால் பட நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு!! திரைத்துறையினர் இரங்கல்!! பிரபல பாலிவுட் நடிகை மஞ்சு சிங் . இவருக்கு வயது 74. இவர் ஹிந்தி கோல்மால் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அத்துடன் டி.வி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்தார். இவர் மும்பையில் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு குறித்து பாடலாசிரியரும், திரைக்கதை ஆசிரியருமான ஸ்வானந்த் கிர்கிரே செய்திக்குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் , ‘இப்போது மஞ்சு சிங் நம்முடன் இல்லை. என்னை டெல்லியில் இருந்து மும்பைக்கு அழைத்து வந்து டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார். பல அற்புதமான நிகழ்ச்சிகளை உருவாக்கினார். ‘ஸ்வராஜ்’, ‘ஏக் கஹானி’, ‘ஷோ டைம்’ போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளை தயாரித்து, இந்திய தொலைக்காட்சியின் பிரிக்க முடியாத அங்கத்தினராக திகழ்ந்தார்’ என குறிப்பிட்டுள்ளார். இவரது நிகழ்ச்சிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இருக்கும். இவர் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பட்ட திரைப்பட விழாக்களில் தமது...