முட்புதரில் ரத்தவெள்ளத்தில் இளம்பெண் மீட்பு.. சுத்தியால் கொடூரமாக தாக்குதல் - நடந்தது என்ன?1961099478
முட்புதரில் ரத்தவெள்ளத்தில் இளம்பெண் மீட்பு.. சுத்தியால் கொடூரமாக தாக்குதல் - நடந்தது என்ன? விருத்தாசலம் அருகே இளம்பெண்ணை சுத்தியால் தலையில் தாக்கிய இளைஞர் மீது கடும் வடிக்கை எடுக்க கோரியும் அந்த இளைஞருக்கு உதவியவர்களை கைது செய்யக் கோரியும் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பாமகவினர் கடலூர் வடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த அம்பலவாணன் மகன் ஸ்ரீதர். குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் வருகின்ற 10ஆம் தேதி திருமணம் நடக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீதர் இளம்பெண்ணை கார்மாங்குடி வெள்ளாற்று அருகே தனியாக தனது டூவீலரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஸ்ரீதருக்கும் இளம்பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்ரீதர் இளம்பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தோடு, பையில் வைத்திருந்த சுத்தியால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட இளம்பெண் க...