விமானத்தில் பறந்த வசதியற்ற மாணவிகள்!216339186
விமானத்தில் பறந்த வசதியற்ற மாணவிகள்! ரவுண்ட் டேபிள் இந்தியா & லேடீஸ் சர்க்கிள் இந்தியா பல ஆண்டுகளாக ஃபேண்டஸி விமானத்தை நடத்துகிறது. அந்த அமைப்பினர், ஆவடியில் உள்ள சிரகு மாண்டிசோரி பள்ளி, சாஷா மோகினானி விவேகானந்தா வித்யாலயா பள்ளிகளை சேர்ந்த 30 மாணவிகளை மணலியில் இருந்து ஹைதராபாத் நகருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றனர். இண்டிகோ விமானத்தில் பயணம் மேற்கொண்ட மாணவிகளுக்கு காலை உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை உணவை முடித்த பிறகு மாணவிகள் வழக்கமான பாதுகாப்பு சோதனை நடைமுறைகளுக்கு பிறகு விமான நிலையத்திற்குள் சென்று சிறிது நேரம் சுற்றி பார்த்தனர். பின்னர் விமானம் மூலம் ஹைதராபாத்தை அடைந்ததும், காக்பிட் எனப்படும் விமானி அறையை பார்த்துவிட்டு விமானப் பணி பெண்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வெளியே வந்ததும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவை சாப்பிட்ட அவர்கள் வொண்டர் லாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு 5 மணி நேரம் செலவழித்துவிட்டு 5 மணியளவில் ஹைதராபாத் விமான நிலையத்துக்கு திரும்பினர். அதன் பின் மாலை 5 மணியளவில், ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு திரும்பினர். இந்...