சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு! ஜூன் 1ம் தேதியான இன்று மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலும், பெரிய நிம்மதியளிக்கும் வகையிலும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன ஜூன் 1ம் தேதியான இன்று மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலும், பெரிய நிம்மதியளிக்கும் வகையிலும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன கேஸ் சிலிண்டர்விலையை மாதத்துக்கு இருமுறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. மாதத்தின் முதல் தேதியிலும் 16ம் தேதியிலும் விலையை மாற்றம் செய்கின்றன. அந்த வகையில் சிலிண்டர் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று மாற்றம் செய்துள்ளன. 19கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பால் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை குறையும். சிலிண்டர்விலை குறையும் பட்சத்தில் அதன் தாக்கம் விலையிலும் சிறிதளவு எதிரொலிக்கும். அதுமட்டுமல்லாமல் சிலிண்டர் விலை உயர்வின் தாக்கத்தை வாடிக்கையாளர்கள் மீது ஹோட்டல் உரிமையாளர்கள் சுமத்திய நிலையில் இந்த விலைக் குறைப்பின் பலன்களும் ...