உஷார்!! இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!!
உஷார்!! இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!! தமிழகத்தில் . வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வங்கக்கடலில் இன்று நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இனி வரும் நாட்களில் தமிழகத்தின் பெரும் பகுதிகள் மழை பெறும். ஏற்கனவே பெய்த தொடர் மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. 2015க்கு பிறகு சென்ற ஆண்டு அதிக அளவு மழை பெய்துள்ளது. இதனால் இன்னும் டெல்டா மாவட்டங்கள், நீர்நிலைகளில் நீர் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதே போல் இன்றும் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை,கடலூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, நாகை,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை