4வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு.. மாவட்ட வாரியாக விலை நிலவரம் என்ன?
4வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு.. மாவட்ட வாரியாக விலை நிலவரம் என்ன? சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் 5வது நாளாக இன்றும் விலை 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 104.43 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.4 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்ற வந்த நிலையில் கடந்த பல நாட்களாக நாட்டில் பெட்ரோல் டீசல் விலை எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து ஒரே விலையில் நீடித்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலை கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் தலைநகரான சென்னையில...