Posts

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் குமரவேல் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஈரோடு பொன்காளியம்மன் திருவிழா: தீப்பந்தம் ஏந்தி வழிபாடு செய்த பக்தர்கள்!

Image
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் பொங்கல் விழா நடைபெறும். அதன்படி இந்தாண்டு பொங்கல் விழா கடந்த 15-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி பொன்காளியம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. கடந்த 20-ம் தேதி வேலாயுதசுவாமி கோயிலில் இருந்து பொன்காளியம்மன் கோயிலுக்கு அம்மன் அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை செய்து வழிபட்டனர்.அதனை தொடர்ந்து குதிரை துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது. குதிரை துளுக்கியத்தை தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விரிவாக படிக்க >>

வலிமை மீது கேஸ் போட்ட தயாரிப்பாளருக்கு H.வினோத் கொடுத்த மொரையான பதிலடி.! யாரும் எதிர்பார்க்காத தகவல்

Image
நடிகர் அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் வலிமை திரைப்படத்தின் கதை மெட்ரோ திரைப்படத்தின் கதை போல் இருப்பதாகக் கூறி  மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் கிருஷ்ணா வழக்கு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்தார். அதுமட்டுமில்லாமல் வலிமை திரைப்படத்தை வெளியிடக்கூடாது எனவும் OTT யில் அனுமதிக்கக் கூடாது எனவும் அதிரடியாக மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.  இந்த நிலையில் திட்டமிட்டபடி 25ஆம் தேதி நாளை வலிமை திரைப்படம் OTT இணையதளமான ஜீ 5  ல் வெளியாக இருக்கிறது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தற்பொழுது வலிமை... விரிவாக படிக்க >>

வங்கக் கடலில் உருவாகியுள்ள அசானி புயல்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…!!

Image
வங்கக் கடலில் உருவாகியுள்ள அசானி புயல்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…!! வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(மார்ச்.21) புயலாக வலுப்பெற்று அந்தமான் நிகோபார் தீவுகளை கடக்கும் என தெரிகிறது. இந்த புயலுக்கு ‘அசானி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை இலங்கை சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று(மார்ச்.21) முதல் வருகிற 24ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று(மார்ச்.21) அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று

32,500 சதுரடியில் 400 கிலோ தானியங்களால் சிட்டுக்குருவி உருவப்படம் வரைந்து,...

Image
32,500 சதுரடியில் 400 கிலோ தானியங்களால் சிட்டுக்குருவி உருவப்படம் வரைந்து, பொறியியல் மாணவர் அசத்தல்

20-03-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // HAPPY SUNDAY //

Image
20-03-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // HAPPY SUNDAY //

தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு.. சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தகவல்

Image
தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு.. சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தகவல்