பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு.. மாவட்டவாரியாக இன்றைய (மார்ச் 29-2022) நிலவரம்


பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு.. மாவட்டவாரியாக இன்றைய (மார்ச் 29-2022) நிலவரம்


தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்தே காணப்படுகிறது. 

உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இன்றும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், 137 நாட்களுக்குப் பிறகு மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

சென்னையில் இன்று காலை ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து ரூ.105.94க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 67 காசுகள் உயர்த்தப்பட்டு 96 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, கடந்த 8 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.54 ரூபாயும், டீசல் விலை 4.57 ரூபாயும் அதிகரித்திருப்பதால் மக்களை அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பெட்ரோல் விலை நிலவரம்:

சென்னை - ரூ.105.94

கோவை - ரூ.106.57

மதுரை - ரூ.106.51

திருச்சி - ரூ.106.28

சேலம் - ரூ.106.69

அரியலூர் - ரூ.106.75

கடலூர் - ரூ.108.03

தருமபுரி - ரூ.107.31

திண்டுக்கல் - ரூ.106.83

ஈரோடு - ரூ.106.83

காஞ்சிபுரம் - ரூ.106.20

கன்னியாகுமரி - ரூ.106.87

கரூர் - ரூ.106.22

கிருஷ்ணகிரி - ரூ.107.46

நாகப்பட்டினம் - ரூ.107.38

நாமக்கல் - ரூ.106.52

நீலகிரி - ரூ.108.09

பெரம்பலூர் - ரூ.106.84

புதுக்கோட்டை - ரூ.106.98

ராமநாதபுரம் - ரூ.106.93

சிவகங்கை - ரூ.106.78

தேனி - ரூ.106.84

தஞ்சாவூர் - ரூ.106.55

திருவாரூர் - ரூ.107.22

திருநெல்வேலி - ரூ.106.25

திருப்பூர் - ரூ.106.82

திருவள்ளூர் - ரூ.106.10

திருவண்ணாமலை - ரூ.107.55

தூத்துக்குடி - ரூ.106.61

வேலூர் - ரூ.107.25

விழுப்புரம் - ரூ.107.67

விருதுநகர் - ரூ.106.59

Must Read : பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

இந்நிலையில், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் நடத்திய முதல் நாள் வேலை நிறுத்தத்தால் வங்கிகள், காப்பீட்டு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கேரளா, மேற்குவங்க மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.  இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog