சிசுவின் குறைபாடுகளை கண்டறிய புதிய பரிசோதனை திட்டம்!


சிசுவின் குறைபாடுகளை கண்டறிய புதிய பரிசோதனை திட்டம்!


நாட்டிலேயே முதல்முறையாக அரசு மருத்துவமனையில் சிசுவின் குறைபாடுகளை கண்டறிவதற்கான புதிய பரிசோதனை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார்.

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், நாட்டிலேயே முதன்முறையாக, அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கான ஆரம்பநிலை கருவளர்ச்சி குறைபாடுகளை கண்டறியும் மருத்துவ பரிசோதனை திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட மாவட்ட சுகாதாரப் பேரவை மருத்துவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

The Most Beautiful Islands in the World to Daydream About #Islands

Maple Walnut Muffins