கெட்ட வார்த்தை பேசி பட வாய்ப்பை கைப்பற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ் – கேட்ட அதிர்ச்சியான இயக்குனர்.!


கெட்ட வார்த்தை பேசி பட வாய்ப்பை கைப்பற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ் – கேட்ட அதிர்ச்சியான இயக்குனர்.!


சினிமா உலகில் நடிகை கள்அழகாக இருந்தால் மட்டும் போதாது திறமையும் வேண்டும் என்பதை அப்போது உணர்த்தி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆள் பார்ப்பதற்கு செம்ம அழகாக இல்லை என்றாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியை சம்பாதித்து வருகிறார்.

மேலும் இவருக்கு வாய்ப்புகளும் இன்றளவும் குறைந்தபாடு இல்லாமல் குவிந்த வண்ணமே இருக்கிறது. அந்த வகையில் 2022 ல் மட்டுமே இவர் கையில் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம் போன்ற பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். முதலில் மோகன்தாஸ் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த படத்தில் விஷ்ணு விஷால் உடன் அவர் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தடுத்த படங்கள் வெளிவரும் என கூறப்படுகிறது. இப்படி இருகின்ற நிலையில்  ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வடசென்னை இந்தப் படத்தில் ஹீரோவாக தனுஷ் நடித்து இருந்தார் இந்த படத்தை தனக்கே உரிய பாணியில் வெற்றிமாறன் இயக்கி இருந்தார்.

இந்த படம் 80 கால கட்டங்களில் வட சென்னையில் நடந்த சில முக்கியமான சம்பவங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது பத்மா என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருப்பார் இந்த படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று இருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அவர் சொன்னது : வடசென்னை படத்தின் ஆடிஷன் டைமில் நடிகை சமந்தா, அமலாபால் உள்ளிட்ட நடிகைகள் ஆடிசன் முடித்து கொண்டிருந்தனர் அப்போது நானும் வெற்றிமாறன் சார் என் ஆபீஸுக்கு போனேன் திடீரென்ற உனக்கு கெட்ட வார்த்தை பேச தெரியுமா என கேட்டார் அப்போது நான் அதிர்ச்சி அடைந்தேன்.

நான் எப்படி பேசுவது அதுவும் உங்கள் முன்னால் என தயங்கி கேட்டேன் அதற்கு பக்கத்தில் இருந்த மற்றவர்களை போக சொல்லி நான் பார்த்துக் கொள்கிறேன் நீ பேசு என கூறினார். ஐஸ்வர்யா தைரிமாக தனக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளைப் பேசினார் உடனே வெற்றிமாறன் வெளியே போக பயந்து அடித்துக்கொண்டு சார் என்ன ஆச்சு என கேட்டேன் அப்புறம் பத்மா வடசென்னை படத்தின் ஷூட்டிங்குக்கு தயாராகி விடு என கூறினார்.

Comments

Popular posts from this blog

Maple Walnut Muffins

The Most Beautiful Islands in the World to Daydream About #Islands

Plant DNA found for the first time in animals bizarre study reveals #Animals