இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்!!1001100253


இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்!!


மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விக்ரம் திரைப்படம் வெற்றியடைவதற்கு காரணமாக இருந்த படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கமல். விக்ரம் படத்தின் வெற்றியை, நன்றி தெரிவிக்கும் வகையில் கமல், லோகேஷ் கனகராஜுக்கு கார் பரிசளித்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Comments

Popular posts from this blog

Maple Walnut Muffins

The Most Beautiful Islands in the World to Daydream About #Islands

Moodboard Le design culinaire ou food design est sur tous les fronts