சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!202500893
சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!
ஜூன் 1ம் தேதியான இன்று மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலும், பெரிய நிம்மதியளிக்கும் வகையிலும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன
ஜூன் 1ம் தேதியான இன்று மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலும், பெரிய நிம்மதியளிக்கும் வகையிலும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன
கேஸ் சிலிண்டர்விலையை மாதத்துக்கு இருமுறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. மாதத்தின் முதல் தேதியிலும் 16ம் தேதியிலும் விலையை மாற்றம் செய்கின்றன. அந்த வகையில் சிலிண்டர் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று மாற்றம் செய்துள்ளன.
19கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக் குறைப்பால் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை குறையும். சிலிண்டர்விலை குறையும் பட்சத்தில் அதன் தாக்கம் விலையிலும் சிறிதளவு எதிரொலிக்கும். அதுமட்டுமல்லாமல் சிலிண்டர் விலை உயர்வின் தாக்கத்தை வாடிக்கையாளர்கள் மீது ஹோட்டல் உரிமையாளர்கள் சுமத்திய நிலையில் இந்த விலைக் குறைப்பின் பலன்களும் இனிமேல் மக்களுக்கு கிடைக்கும்.
இதன்படி 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.135 விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதற்கு முன் ரூ.2354 ஆக இருந்த சிலிண்டர் விலை, இனி ரூ.2,219 என்று விலை குறையும்.
டெல்லியில் வர்த்தக சிலிண்டர்விலை ரூ.2354 விற்பனை செய்யப்பட்ட நிலையில் இனி ரூ.2,219 ஆககுறையும். கொல்கத்தாவில் ரூ.2454 என்று விற்கப்பட்ட சிலிண்டர் இனிமேல் ரூ.2,322 ஆக குறையும்.
மும்பையில் வர்தத்க சிலிண்டர் ரூ.2,306க்கு விற்கப்பட்டது இனிமேல் ரூ.2,171.50ஆகக் குறையும், சென்னையில் ரூ.2,507க்கு விற்கப்பட்ட சிலிண்டர் ரூ.135 குறைந்து, ரூ.2,373 ஆகக் குறையும்.
கடந்த மே 19ம் தேதி வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் மற்றும் வர்த்தகரீதியான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. மே மாதத்தில் சிலிண்டர்விலை 2 முறை உயர்த்தப்பட்டது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல்கேஸ் சிலிண்டர் விலை ரூ.3.50 உயர்த்தப்பட்டது, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக கேஸ் சிலிண்டர் ரூ.8 உயர்த்தப்பட்டது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14 கிலோ எடை கொண்ட கேஸ்சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும்செய்யப்படவில்லை.
Comments
Post a Comment