முட்புதரில் ரத்தவெள்ளத்தில் இளம்பெண் மீட்பு.. சுத்தியால் கொடூரமாக தாக்குதல் - நடந்தது என்ன?1961099478
முட்புதரில் ரத்தவெள்ளத்தில் இளம்பெண் மீட்பு.. சுத்தியால் கொடூரமாக தாக்குதல் - நடந்தது என்ன?
விருத்தாசலம் அருகே இளம்பெண்ணை சுத்தியால் தலையில் தாக்கிய இளைஞர் மீது கடும் வடிக்கை எடுக்க கோரியும் அந்த இளைஞருக்கு உதவியவர்களை கைது செய்யக் கோரியும் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பாமகவினர் கடலூர் வடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த அம்பலவாணன் மகன் ஸ்ரீதர். குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் வருகின்ற 10ஆம் தேதி திருமணம் நடக்கப் போவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்ரீதர் இளம்பெண்ணை கார்மாங்குடி வெள்ளாற்று அருகே தனியாக தனது டூவீலரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஸ்ரீதருக்கும் இளம்பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்ரீதர் இளம்பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தோடு, பையில் வைத்திருந்த சுத்தியால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயம் ஏற்பட்ட இளம்பெண் கூச்சலிட அப்பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார் விவசாயிகள் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். அப்போது முட்புதரில் இளம்பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தற்போது பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பி ஓடிய ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எங்கள் பெண் யாரையும் காதலிக்கவில்லை, ஸ்ரீதர் பெண்ணை கடத்திச் சென்று நண்பர்களுடன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிகள் நடக்க இருந்ததாக குற்றம் சாட்டி, அவனது நண்பர்களையும் கைது செய்யக்கோரியும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கவும் கோரிக்கை வைத்தனர்.
மேலும், குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன் குப்பம் என்ற இடத்தில் கடலூர்-வடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment