4வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு.. மாவட்ட வாரியாக விலை நிலவரம் என்ன?


4வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு.. மாவட்ட வாரியாக விலை நிலவரம் என்ன?


சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் 5வது நாளாக இன்றும் விலை 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 104.43 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.4 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

 

தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்ற வந்த நிலையில் கடந்த பல நாட்களாக நாட்டில் பெட்ரோல் டீசல் விலை எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து ஒரே விலையில் நீடித்து வருகிறது.

பெட்ரோல் டீசல் விலை

கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.40 ரூபாயாகவும் ஒரு லிட்டர் டீசலின் விலை 91.43 ரூபாயாகவும் உள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 111 டாலரை தொட்டு நிலையில் இந்தியாவில் தேர்தல் காரணமாகவே பெட்ரோல் டீசல் விலைகள் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு

இந்நிலையில் கடந்த நாட்களாக சர்வதேச சந்தையில் உக்ரைன் போர் காரணமாக கச்ச எண்ணெய் விலை அதிகரிப்பதால் விலை உயரலாம் என கணிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.102. 91 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.92. 95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றும் உயர்வு

சென்னையில் பெட்ரோல், விலை நேற்று லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.103.67 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.93.71 காசுகளுக்கும் விற்பனையாகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களைப் போலவே 5வது நாளில் 4வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்றும் 76 காசுகள் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.43-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.47-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை நிலவரம்

தற்போதைய நிலவரப்படி சென்னையில் ரூ.104.43க்கும், கோவையில் ரூ.104.95க்கும், மதுரையில் ரூ.105.00க்கும், திருச்சி ரூ.105.19க்கும், சேலத்தில் ரூ.105.54க்கும், அரியலூரில் ரூ.105.67க்கும், அதிகபட்சமாக மாவட்ட அளவில் கடலூரில்- ரூ.106.55க்கும் பெட்ரோல் விற்பனையாகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், போலவே சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை இந்த வாரம் உயர்த்தப்பட்டது. டெல்லி அடங்கிய தலைநகர் பிராந்தியத்தில் சிஎன்ஜி மற்றும் குழாய் வழியாக வீட்டு சமையலறைக்கு வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

 

 

Comments

Popular posts from this blog