தமிழகத்தில் ரூ.2,600 கோடி முதலீடு செய்ய அமீரக நிறுவனங்கள் ஒப்பந்தம்!
துபாயில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டத்தில், அமீரக தொழில் நிறுவனங்கள் சார்பில் தமிழகத்தில் ரூ.2,600 கோடி முதலீடு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, 4 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பங்கேற்றார். அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு தளத்தை திறந்து வைத்தார். இதில், தமிழ்நாடு அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டு, துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தது. தொடர்ந்து நேற்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் ஜெபல் அலி சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு சென்றார். அங்குள்ள... விரிவாக படிக்க >>