61 – வது திரைப்படம் வெற்றிபெற கோயிலுக்கு சென்றாரா அஜீத்.? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.


61 – வது திரைப்படம் வெற்றிபெற கோயிலுக்கு சென்றாரா அஜீத்.? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.


தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து பல வெற்றி/ தோல்வி படங்களை கொடுத்து வந்தாலும் தனக்கென ஒரு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார் நடிகர் அஜித். இந்தக் காரணத்தினால் தமிழ் சினிமாவில் அவர் தவிர்க்க முடியாத ஒரு நபராக இருக்கிறார். இப்பொழுது அஜித் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விசுவாசம், நேர்கொண்டபார்வை, வலிமை ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியை ருசித்த நிலையில் இப்பொழுது அஜித் தனது 61,  62வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அஜித்தின் 61 வது திரைப்படத்தைத் ஹச்.  வினோத் இயக்கவுள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் போனிகபூர் தயாரிக்க இருக்கிறார்.

இந்த படத்தை மூன்று, நான்கு மாதங்களிலேயே எடுத்து வெற்றிகரமாக படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முனைப்பு காட்டும் என கூறப்படுகிறது. 61 படத்தை முடித்த கையோடு அஜித் தனது 62 வது திரை படத்தில் பணியாற்றியிருக்கிறார் இந்த படத்தை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார்.

லைக்கா நிறுவனம் அஜித்துடன்  முதல்முறையாக உள்ளதால் 62 வது படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனது குடும்பத்துடன் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகிறார் அண்மையில் தனது மகன் பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அதேசமயம் ajith-shalini இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் வைரலானது அதனை தொடர்ந்து இப்பொழுது அஜித்  கோயிலுக்கு சென்று வந்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Comments

Popular posts from this blog

பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 37 ஆண்டு சிறை

சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்! 90 வயது மூதாட்டியின் முகத்தில் மனித மலம் பூசிய கொடூர மனிதன்..!1835389002

Moodboard Le design culinaire ou food design est sur tous les fronts