அஜித்62- விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா தயாரிப்பில் அஜித்! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அஜித்62- விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா தயாரிப்பில் அஜித்! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
H.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் திரைப்படம் திரையரங்கில் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தள்ளிப்போனது, நீண்டகாலமாக இப்படம் படப்பிடிப்பில் இருந்ததால் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது வலிமை.
இதற்கு முன்பும் வினோத் இயக்கத்திலேயே அஜித் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்த படமான AK61-ம் வினோத் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளார். வினோத்துக்கு முன்பு இயக்குனர் சிவாவுடன் தொடர்ந்து மூன்று படங்கள் நடித்து இருந்தார் அஜித். இவ்வாறு தொடர்ந்து ஒரே இயக்குனர்களுடன் அஜித் படம் நடிப்பதால் சில ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அஜித் மற்ற இயக்குனர்களுடன் படம் நடிக்க வேண்டும் என்று இணையத்தில் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். அந்த வகையில் தற்போது அஜித்தின் AK62 படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜீத் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது கிட்டத்தட்ட உறுதியான தகவல் என்றே கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த வருட இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்த நாளன்று வெளியாக உள்ளது. நயன்தாராவுடன் கடைசியாக அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார், அதற்கு முன்பு ஆரம்பம் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். வலிமை படத்தில் ஒரு பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment