10ம் வகுப்பு மாணவர்களை கண்ணீர் விடச் செய்த கணிதத்தேர்வு
10ம் வகுப்பு மாணவர்களை கண்ணீர் விடச் செய்த கணிதத்தேர்வு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப் பாடத் தேர்வு பல மாணவர்கள் தேர்சி பெறுவார்களா என்கிற சந்தேகத்தை ஏற்ப்படுத்தும் அளவு கடினமாகவும் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளும் இடம்பெற்றுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு மதிப்பெண் மற்றும் வரைபடம் போன்றவை தவிர்த்து மற்ற அனைத்து கேள்விகளும் மிக கடினமாக இருந்துள்ளன. ஐந்து மதிப்பெண் பகுதியில் 14 கேள்விகள் தரப்பட்டு, பத்து கேள்விகளுக்கு விடை எழுதவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 42 வது கேள்வி பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. மேலும் 14 கேள்விகளில், 5 கேள்விகள் மட்டுமே விடையளிக்கும் வகையில் இருந்ததாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இரு மதிப்பெண் பகுதிகளில் 14 கேள்விகள் தரப்பட்டு, 10 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் . இதிலும் 5 கேள்விகளுக்கு மட்டுமே விடையளிக்கும் வகையில் இருந்ததாகவும், மீதமிருந்த 10 கேள்விகளும் எழுத முடியாத அளவிற்கு இருந்ததாகவும் ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.
மேலும், 16வது கேள்வி நடத்தப்படாத பாடப் பகுதியிலிருந்து கேட்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடப் பகுதிகள் குறைக்கப்பட்டன. அதன்படி குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து கேள்வி கேட்கப்படாமல், நீக்கம் செய்யப்பட்ட பாடப் பகுதியிலிருந்து கேட்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதோடு 28 வது கேள்வி , பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டு இருப்பதும் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாக மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்யும் வகையில் நேற்றைய கேள்வித்தாள் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால் கணிதம் நன்கு படிக்கக்கூடிய மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைய முடியும் என்றும் கணிதத்தில் தேர்ச்சி மதிப்பெண் பெற்று பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறலாம் என்று எண்ணியிருந்த மாணவர்கள் தேர்ச்சி அடைய வாய்ப்பில்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
Also Read: பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு : தமிழகத்தில் நிலவரம் என்ன?
கொரொனோ காரணமாக 2 ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் பொதுத்தேர்வில் கேள்விகள் எளிமையாக கேட்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேள்விகள் கடுமையாக கேட்கப்பட்டுள்ளதுடன் பழையபாடத்திட்டத்திலிருந்தும் கேள்விகள் இடம்பெற்றிருப்பது தேர்வுத்துறை எவ்வாறு இப்படியான முறையில் கேள்விகள் இடம்பெற அனுமதித்தது என்கிற கேள்வியையும் ஆசிரியர்கள் மாணவர்கள் முன்வைக்கின்றனர்.
இதற்காக பள்ளிக்கல்வித்துறை என்ன முடிவு எடுக்கப் போகின்றது என்பது குறித்து வரக்கூடிய நாட்களில் தெரியவரும் மொத்தத்தில் கணிதத் தேர்வு மாணவர்களை கண்ணீர்விட செய்துவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment