அஜித், விஜய் படங்களுக்கு பாடிய பாடகர் மாரடைப்பால் மரணம்!
அஜித், விஜய் படங்களுக்கு பாடிய பாடகர் மாரடைப்பால் மரணம்!
அஜித், விஜய், தனுஷ் உள்பட பல பிரபல நடிகர்களின் படங்களில் பாடிய பாடகர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி பாடகர்களில் ஒருவர் கேகே. கிருஷ்ணகுமார் என்று அழைக்கப்படும் இவர் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இந்தியாவில் உள்ள 11 மொழிகளில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பாடகர் கேகே கலந்து கொண்ட நிலையில் இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவருடைய உதவியாளர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்த போது மாரடைப்பு காரணமாக ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாடகர் கே கே மறைவிற்கு பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment