ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ ரெய்டு: `எத்தனை முறை... நானே மறந்துவிட்டேன்’ - கார்த்தி
இருப்பினும் இதுவரை எந்த வழக்கின் கீழ் சிபிஐ சோதனை நடைபெறுகிறது என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.
ப.சிதம்பரம் மட்டுமல்லாமல், அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சி.பி.ஐ சோதனை நடத்திவருகின்றனர். கார்த்தி சிதம்பரத்தின் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் கீழ் இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிபிஐ-யின் இந்த திடீர் சோதனை குறித்து, ``எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள். இதுவரை எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன்" என கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

Comments
Post a Comment