‘நூல்’ வழியாக பாய்ந்த மின்சாரம்.. சிறுவன் உடல் கருகி பலியான சோகம்..!
‘நூல்’ வழியாக பாய்ந்த மின்சாரம்.. சிறுவன் உடல் கருகி பலியான சோகம்..!
பெங்களூருவில், காற்றாடி நூலில் மின்சாரம் பாய்ந்து (electrocution) 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியைச் சேர்ந்த 11 வயதாகும் அபுபக்கர் என்ற சிறுவன் நேற்று மாலை தனது வீட்டு அருகே உள்ள பூங்காவில் நூலில் காற்றாடி விட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, சிறுவன் பறக்க விட்ட காற்றாடி காற்றின் வேகத்திற்கேற்ப மேலே மேலே பறந்துள்ளது. இதனையடுத்து, மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்த சிறுவன், மேலே இருந்த உயர் மின் அழுத்த கம்பியைக் கவனிக்கவில்லை.
பின்னர், அதுவே சிறுவனின் உயிருக்கு எமனாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில், காற்றாடியின் நூல் எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் லேசாக உரசியுள்ளது.
இதனால், காற்றாடி நூல் வழியாக பாய்ந்த மின்சாரம் (electrocution), அதைப் பிடித்திருந்த சிறுவனின் மீது பாய்ந்து தூக்கி வீசியது. இதையடுத்து, கண் சிமிட்டும் நொடியில் மின்சாரம் தாக்க, அந்த இடத்திலேயே சிறுவன் உடல் கருகி கீழே விழுந்துள்ளான்.
இதனது தொடர்ந்து, உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி சிறுவன் அபுபக்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment